தலைப்பு: கபாடபுரம் (சரித்திர நாவல்)kapaadapuram
ஆசிரியர்: - நா. பார்த்தசாரதி
பிரிவு: வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
மொழியாக்கம்: தமிழ்
புதிப்பு: மதுரை மின்னூல் திட்டம்
புத்தக சுருக்கம்: இனி இங்கு அறிமுகம் செய்யப் போகின்ற காலத்தைப் பற்றியும் ஒரு
வார்த்தை. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல்
கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக்
கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற
மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி -
வளர்த்த, வாழ்ந்த ஒரு பொற்காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப்
படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்த காலத்தின் பெருமைகுரிய
நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற பெருமிதத்தோடும்,
ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம்.