Title: கனவின் மீதி. . . (ஒரு கவிதைத்தொகுப்பு)
Author: கி. பி. அரவிந்தன்
Subject: Short Stories
Language: Tamil
Pages: N/A
ISBN:N/A
Publisher: Project Madurai
Book Description:
Download Pdf
Author: கி. பி. அரவிந்தன்
Subject: Short Stories
Language: Tamil
Pages: N/A
ISBN:N/A
Publisher: Project Madurai
Book Description:
கடல் தாண்டியிருந்தாலும் சரி, கண்டங்கள் தாண்டியிருந்தாலும் சரி, அரவிந்தன் கரம்பற்றி கருத்துப் பயணம் செய்வதை யாராலும் பிரிக்க முடியாது என்பதற்கு 'கனவின் மீதி' நூல் வெளியீடே சான்று.
உழவர் குடியில் பிறந்த என்னை வறுமைத்துயர் ஆட்டிப் படைத்தது. அந்த காலத்தில் தஞ்சையில் அறிவுறுவோன் பேருந்து ஏற்றிவிட அரணமுறுவல் சென்னையில் ஏற்றுக்கொண்டார். ஏற்றுக் கொண்ட அரணமுறுவல் சுந்தர் என அறியப்பட்ட கி.பி. அரவிந்தனிடம் ஒப்படைத்தார். மிரள வைத்த சென்னையைப் பரிச்சியப்படுத்தியவர் பழக்கப்படுத்தியவர் அரவிந்தன் தான். இது நடந்தது 1979ஆம் ஆண்டு. அப்போது தொடக்கம் இன்றுவரை உறவு அறாத நட்பு வட்டத்தின் நெருங்கிய சொந்தக்காரர் அரவிந்தன்.
அரவிந்தனோடு ஒரே மாடியில் உறங்கியிருக்கிறோம். உறக்கமற்று பல இரவுகளில் பேசியிருக்கிறோம். அப்போது பார்த்த அரவிந்தனிலிருந்து 85ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுற்றி சுற்றி வந்து சொற்பொழிவாற்றிய அரவிந்தன் ஆற்றல் மிகுந்த பேச்சாளராக உயர்ந்து நின்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நான் வியந்து நின்றேன்.
எந்தப் பேச்சிலும் ஒரு விவாதத் தீயை மூட்டிவிடுகின்ற வல்லமை பெற்ற அரவிந்தன் '99களில் நெஞ்சை உலுக்குகின்ற கவிபுனையும் கவிஞனாக நிமிர்ந்து நிற்கிறார்.
அமைப்பைக் கட்டுகின்ற அமைப்பாளன், ஈழ விடுதலையை முன்னெடுக்கின்ற வலிமைமிக்க பிரச்சாரகன், புலம்பெயர்ந்து அயல்நாட்டில் வாழும்போதும் 'தாயகப் பிரிவை' எண்ணியேங்கும் கவிஞன் ஆகிய மூன்று நிலைகளிலும் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.
தமிழகத்தில் அரவிந்தனின் கவிமனதைக் கண்டு கொண்டவர்களில் கே.எம்.வேணுகோபால் முக்கியமானவர். பதிப்பகப் பணியில் என்னை ஊக்கப்படுத்துவதில் முனைவர் இரா.இளவரசு, முனைவர் சுப.வீரபாண்டியன், முனைவர் பாரதிபுத்திரன், 'நிலவளம்' க.சந்திரசேகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
'நந்தன்' இதழில் பணியாற்ற வாய்ப்புத் தந்து பதிப்புப் பணியில் ஆர்வப்படுத்தி வளர்த்தெடுக்கும் தந்தை பெரியார் தமிழிசை மன்றத் தலைவர் திரு.நா.அருணாசலம் அவர்களை மறக்கவியலாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துக்களே எங்களுக்கு உற்சாகத்தை அளித்து மேலும் பல மின்னூல்களை வழங்க காரணமாக அமையும் என்பதால் தவறாமல் கருத்துக்களை விட்டுச்செல்லவும். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி!